தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் பரவலாக மழையும் என்றும், கடலோர தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசைக்காற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் வரும் 4ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழையும், உள் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசத்தில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.