சனி, 1 டிசம்பர், 2018

இமயமலையில் பயங்கர நிலநடுக்கத்திற்கு வாய்ப்பு... இந்திய விஞ்ஞானிகள் எச்சரிக்கை! December 01, 2018

Image

இமயமலையில் மிகப்பெரிய அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

இமயமலையில் 8.5 ரிக்டர் அளவுக்கு மேல் பதிவாகும் பயங்கர நிலநடுக்கத்தால், உத்தரகாண்ட் முதல் மேற்கு நேபாளம் வரை பாதிப்புகள் இருக்கும் என்பது இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலநடுக்கத்தால் நேபாள- இந்திய எல்லையில் 15 மீட்டர் அளவுக்கு இமயமலை சரிந்து விழக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் உள்ள ஜவகர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையத்தின் புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லி தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது தெரியவந்துள்ளது.