ஞாயிறு, 2 டிசம்பர், 2018

எரிபொருள் விலையை குறைக்க வலியுறுத்தி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வெடித்தது வன்முறை! December 02, 2018

Image

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக வன்முறை வெடித்த நிலையில், பதற்றமான பகுதிகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
பிரான்ஸ் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு, டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், அதன் மீதான வரியை குறைக்கக் கோரி, மஞ்சள் நிற உடையணிந்து போராட்டக்காரர்கள், 3 வாரங்களாக போராடி வருகின்றனர். 
நாடு முழுவதும் 1600 இடங்களில் போராட்டங்கள் நீடித்து வந்த நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள சாம்ஸ் எலிசீஸ் பகுதியில், பொதுமக்கள் கூடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைத்து போராட்டக்கார்கள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். இதில் 20 போலீஸார் உள்பட 110 பேர் காயமடைந்தனர். 
இந்த வன்முறை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. கலவரக்காரர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், போலீஸார் கலைத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பதற்றமான பகுதிகளில் அவசரநிலை பிறப்பிக்க, பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.