புதன், 11 செப்டம்பர், 2019

இனிமேல் 'செல்ஃபி' இல்லை 'ஸ்லோஃபி' தான்....! வெளியானது ஐபோன் 11...!


Image
பலரும் எதிர்பாரத்துக் காத்திருந்த ஆப்பிள் ஈவென்ட் 2019 அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தின் க்யூபெர்டினோ நகரிலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பின் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை வெளியிட்டு அதனுடைய விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி விளக்கினார்.
ஆப்பிள் ஆர்கேட் (AppleArcade)
ஆப்பிள் ஆர்கேட் சேவை (AppleArcade) ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்.19ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சேவைக்கான மாத கட்டணம் 499 டாலர்கள் (சுமார் ரூ.36,000)  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்பிள் டி.வி. பிளஸ் - (AppleTvPlus)
வெறும் $4.99-க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 100 நாடுகளில் இந்த சேவை கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான மாத கட்டணம் 4.99 ( சுமார் ரூ.360 ) டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின்  டி.வி. பிளஸ் அறிவிப்பு NetFlix, AmazonPrime போன்ற தளங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 
இன்று அறிமுகம் செய்யப்படும் ஆப்பிள் சாதனங்களை வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை இலவசமாக வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபாட் 2019 :Apple iPad (7th Gen)
இருமடங்கு வேகமான பிராசஸர் கொண்ட புதிய 10.2 inch iPad  Retina Display கொண்ட iPad (7th Gen) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய ஐபாடியின்  iPad (7th Gen) ஆரம்ப விலை 329 டாலர்கள் ( சுமார் ரூ.29,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது. 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 - Apple Watch Series 5
புதிய ஆப்பிள் வாட்ச்சில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. Apple Watch Series5 மாடலின் ஸ்கீரின் எப்போதும் ஆன் ஆகியிருக்கும். புதிய ஆப்பிள் வாட்ச் ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆபத்து காலங்களில் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் சர்வதேச அவசர எண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை $399  (சுமார் ரூ.40,900) என நிர்ணயக்கப்பட்டுள்ளது. 
ஐபோன் 11: iPhone 11 
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு லென்ஸ்களும் சதுரங்க வடிவம் கொண்ட கேமரா பம்ப்பில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று வைடு ஆங்கிள் சென்சார் மற்றொன்று அல்ட்ரா வைடு சென்சார் ஆகும். இத்துடன் புகைப்படங்களை அழகாக்க பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐபோன்களில் முதல் முறையாக செல்ஃபி கேமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் 11  (iPhone 11) விலை 699 டாலர்கள் என (சுமார் ரூ.₹64,900)  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 11 ப்ரோ  #iPhone11Pro
ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11  ப்ரோ ( #iPhone11Pro) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மூன்று பிரைமரி கேமரா செனசார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12MP WideCamera, 12MP TelePhoto Camera, 12MP Altra Wide Camera வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன் ஃப்ரோ 11  (iPhone 11Pro) விலை 999 டாலர்கள் என (சுமார் ரூ. 99,900) என  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றொரு மாடலானான ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை 1099 டாலர்கள் ( சுமார் ரூ.1,09,900 முதல்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 27ம்தேதி தொடங்குகிறது.

credit ns7.tv