வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற ராணுவம் தயாராக உள்ளது: மத்திய அமைச்சர் வி.கே.சிங்

Image
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தனி திட்டம் உள்ளதாக மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே. சிங் தெரிவித்துள்ளார். 
ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்ற ராணுவம் தயாராக இருப்பதாகவும், அரசின் உத்தரவுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும்  ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்திருந்தார். இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 
அதற்கு பதில் அளித்த அவர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரத்தில், அரசுக்கு தனி திட்டமும் வியூகமும் உள்ளதாகக் கூறினார். அதை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுவது தொடர்பான இவ்விரு கருத்துக்களும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

credit ns7.tv

Related Posts:

  • முஸ்லிம்களின் தலாக் முறைக்கு தடை? பு துடில்லி:முஸ்லிம்களின் தலாக், பலதார மணம் போன்றவற்றை எதிர்த்து, உத்தரகண்டை சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த… Read More
  • Hadis: அற்பமாக கருதப்படும் அழகிய நன்மைகள். இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபி… Read More
  • Quran பொய்ச் சத்தியம் செய்தல்.. இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப … Read More
  • ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் … Read More
  • 2G SPECTRUM: உங்க மனசாட்சிப்படி சொல்லுங்க 2G அப்டின்னா என்னன்னு உங்களுக்கு தெரியுமா? எனக்குத் தெரிஞ்சத நான் சொல்லுறேன்.இப்பவாவது காதுகொடுத்து கேளுங்க ப்ளீஸ். ஆ.இர… Read More