மேற்குவங்கத்தில் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து, மாணவர் அமைப்பினர் நடத்திய பேரணியில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய மாணவர் அமைப்பினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த 11ம் தேதி, வேலை வாய்ப்பின்மையை கண்டித்து பேரணி தொடங்கினர்.
பேரணி மூன்றாவது நாளை எட்டிய நிலையில், மாநிலம் முழுவதும் இருந்து இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இன்று ஹவுரா பகுதியில் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் சாலையில் தடுப்புகளை அமைத்திருந்தனர். தடையை மீறி பேரணி நடத்தியதால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்க முயன்ற போலீசார், பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து பேரணியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் ஏழை மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்
credit ns7.tv