டி.என்.பி.எஸ்.சி. குரூப் -2 முதல் நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு, டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி,
➤ புதிய பாடத்திட்டத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குரூப் II மற்றும் குரூப் IIA தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
➤ பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதலாம் என்றிருந்த நிலையை மாற்றி, முதனிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
➤ தனித் தனி தேர்வு நடத்துவதால் வரிப் பணம் வீணாவதுடன், விண்ணப்பதாரர்களும் இரண்டு முறை தேர்வு எழுத வேண்டிய நிலையை மாற்றப்பட்டுள்ளது.
➤ தமிழ் அல்லது ஆங்கிலம் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதனிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன
➤ முதனிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கில பகுதிகள் முதன்மை (Mains)எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
➤ முதனிலைத் (Prelims) தேர்வு பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, அரசியல் இயக்கங்களின் தோற்றம் குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
➤ திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சமூக நீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் உள்ளிட்ட தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
credit ns7.tv