புதன், 11 செப்டம்பர், 2019

Food Review பணியால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்...!

Image
FOOD REVIEW என சொல்லப்படும் உணவு விமர்சனம் சுவாரஸ்யமான பணியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன?
சின்னத்திரைக்கு போட்டியாக வளர்ந்து வரும் யூடியூப் தான், இந்த தலைமுறையினருக்கு மூன்றாவது கை. யூடியூப்பில் பலரால் பார்க்கப்படும் வீடியோக்களின் பட்டியலில் FOOD REVIEW என சொல்லப்படும் உணவு விமர்சனங்களுக்கு செல்வாக்கு அதிகம்.  
பெரிய அளவில் செலவின்றி, ஊர் ஊராக சென்று பலவகை உணவுகளை ருசி பார்த்து, அதை வீடியோ பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள் FOOD REVIEW BLOGGERS.  உணவு விமர்சனம் செய்பவர்களின் வாழ்க்கை வெளியில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களுக்கே தெரியாமல் உடல்நலன் பாதிக்கப்படுவதும் மறுக்க முடியாதது. புதுவகையான உணவுகளை சாப்பிடும்போது, ஜீரண கோளாறு, ரத்த சோகை நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 
ஆனால், இதுபோன்ற எச்சரிக்கைகள் எதுவும், தங்களின் ஆர்வத்தை தடுக்க முடியாது என்பது BLOGGERகளின் பதிலாக இருக்கிறது. உடல் சார்ந்த பிரச்னை ஒருபுறம் என்றால், உணவு விமர்சனங்கள் செய்வோர் மீதும் புகார்கள் எழுவது, தொடர்கதையாகி வருகின்றன. ஊருக்கு உணவு படைக்க நல்ல செய்தி சொன்னாலும், அந்த உணவே தங்களுக்கு விஷமாகாமல் FOOD REVIEW BLOGGERS பார்த்துக்கொள்வது அவசியம்.
credit ns7.tv