ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

உடல்நிலையை கண்காணித்து மருத்துவருக்கு தகவல் அனுப்பும் ஆடையை வடிவமைத்து மாணவிகள் அசத்தல்...!

Image
நோயாளிகளின் உடல்நிலையை கண்காணித்து, மருத்துவருக்கு, தகவல் அனுப்பும் தானியங்கி ஆடையை வடிவமைத்து, தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் அசத்தியுள்ளனர். 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சுஸ்மிதா, சன்மதி, விசாலி மற்றும் தனஸ்ரீஆகியோர், எலக்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பாடப்பிரிவில் படித்து வருகின்றனர். மின்னியல் பொருட்கள் மேம்பாட்டு குறித்து ஆய்வு மேற்கொண்ட இவர்கள், நோயாளிகளின் உடல்நிலையை கண்காணிக்கும், மீ அமிகோ என்னும் புதிய ஆடையை வடிவமைத்துள்ளனர்.
இந்த, ஆடையினை அணிந்திடும் நோயாளிகளின் உடல்நிலை, இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், உள்ளிட்டவைகளை, ஆடையில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கண்காணித்து, மருத்துவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கணினியின் வாயிலாக தெரியப்படுத்தும் என மாணவிகள் தெரிவித்தனர். தாய்லாந்து நாட்டில் பெண்களின் ஆற்றல் என்ற தலைப்பில் நடைபெற்ற அறிவியல் நிகழ்ச்சியில், இவர்கள் பங்கு பெற்று முதல்பரிசை பெற்றதாகவும் மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர்.
credit ns7.tv