வியாழன், 12 செப்டம்பர், 2019

திருமணிமுத்தாறு நீரில் பொங்கிவரும் ரசாயன நுரை...!

Image
ராசிபுரம் அருகே திருமணிமுத்தாற்றில் ரசாயனம் கலந்து நுரைபோல் பொங்கி வரும் தண்ணீரால் விவசாய நிலங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மதியம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த  கிராமத்தின் வழியே செல்லும் திருமணிமுத்தாறு மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் ஆற்றில் ரசாயனம் கலந்த தண்ணீரை திறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்று நீரில் பொங்கிய நுரை அதிகரித்து மல்லசமுத்திரம் - மதியம்பட்டி சாலையில் பரவியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
மேலும் ரசாயன நுரை விவசாய நிலங்களிலும் பரவியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நிலத்தடி நீரில் ரசாயன நீர் கலந்து குடிநீரும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv