தூத்துக்குடி, திருநெல்வேலியில் நிகழ்ந்த தொடர் படுகொலைகள் எதிரொலியாக, 7 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு மாவட்டங்களில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த கொலைகள் அனைத்தும், பழிக்கு பழியாக 15 ஆண்டுகள் பகைவுணர்வுடன் நிகழ்ந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இக்குற்ற சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க தவறியதாக தூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்களும், நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று 40 காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநயு உத்தரவிட்டுள்ளார்.
credit ns7.tv