சனி, 14 செப்டம்பர், 2019

5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு: சீமான் கண்டனம்!

Image
நடப்பு கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.  ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை அமல்படுத்தத் துணிவதன் மூலம் புதிய கல்விக்கொள்கையை ஏற்க தமிழக அரசு தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது எனவும் விமர்சித்துள்ளார். 
முதிர்ச்சியோ, பக்குவமோ அற்ற வயதில் பொதுத்தேர்வு வைத்து அவர்களைப் பீதியடையச்செய்வது என்பது கல்வியைத் தொடராது பாதியிலேயே இடைநிற்றல் செய்வதற்கே வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலம் மற்றும் மனநலன் ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு கொண்டு வரும் இம்முறையினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 
credit ns7.tv

Related Posts: