செவ்வாய், 17 செப்டம்பர், 2019

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பால் கொந்தளிக்கும் தமிழகம்...!

credit ns7.tv
Image
மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து, வரும் 20-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் 20ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர், இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தி திணிப்பு தொடர்பாக, மத்திய அரசின் அடுக்கக்கட்ட நடவடிக்கையை பொருத்து, தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என கூறினார்.  
மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி கொள்கைக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்திற்கு பாஜக முதலமைச்சர் ஒருவரே எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.