கையெழுத்தான ஒப்பந்தங்கள்:
☛தமிழக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், INTERNATIONAL SKILLS DEVELOPMENT CORPORATION நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
☛லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிங்ஸ் மருத்துவமனை, அதன் கிளைகளை தமிழகத்தில் நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்.
☛லண்டன் சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தமிழகத்தில் செயல்படுத்திட தமிழக முதல்வர் முயற்சி.
☛லண்டனில் உள்ள புகழ்பெற்ற KEW தாவரவியல் பூங்காவைப் போல், தமிழகத்தில் உள்ள தாவரவியல் புங்காக்களை மேம்படுத்த ஆலோசனை.
☛அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணையில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை சேலம் மாவட்டம் தலைவாசலில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்காவில் செயல்படுத்த திட்டம்.
இவை மட்டுமின்றி, பல்வேறு தொழில் நிறுவனங்களுடனும் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
☛அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 16 தொழில் நிறுவனங்களுடன், ரூ. 2,780 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம். இதன் மூலம், 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
☛HALDIA PERTOCHEMICALS நிறுவனம் தனது தொழிற்சாலையை சுமார் ரூ. 50,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்.
☛அமெரிக்காவின் நியுயார்க்கில் ( சான்பிரான்சிஸ்கோவில் ) 20 தொழில் நிறுவனங்களுடன் ரூ. 2,300 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். இதன் மூலம், 6,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்
☛தமிழகத்தில் தொடங்கப்படும் புதுத் தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழக அரசு வழங்கும் எனவும் அதற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களைத் தாண்டி, முதலமைச்சரின் இந்த வெளிநாட்டுப் பயணம், தமிழகத்திற்கு பல்வேறு பயன்களை அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.
credit ns7.tv