ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

, டாக்சி ஓட்டுநர்கள் வேதனை

டெல்லியில் முதலுதவி பெட்டிகளில், ஆணுறை இல்லை என்றால், போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக, டாக்சி ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
போக்குவரத்து விதிகளை மீறினால், பல மடங்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யும், புதிய மோட்டார் வாகன சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் விதிமீறி வாகனம் ஓட்டுபவர்களை, போக்குவரத்து காவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 
ஆனால், முதலுதவி பெட்டிகளில், ஆணுறை வைத்திருக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதாக, டெல்லியில் விநோத குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அபராதம் விதிப்புக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, என கால்டாக்சி ஓட்டுநர்கள் புலம்புகின்றனர். 
அதேநேரம், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் முதலுதவி பெட்டியில், ஆணுறை இருக்க வேண்டும் என எந்த விதியும் இல்லை. இதனிடையே, ஆணுறை தொடர்பாக தாங்கள் எந்த ஓட்டுநருக்கும், அபராத ரசீது வழங்கவில்லை, என்று டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 
credit ns7.tv