வியாழன், 12 செப்டம்பர், 2019

உமரிக்காடு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் - ஆய்வாளர்கள் கோரிக்கை!

Image
திருச்செந்தூர் அருகே ஆற்றில் புதைந்துள்ள பழங்கால கட்டடம் குறித்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 
தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு பகுதியில் தாமிரபரணி ஆறு வற்றியதால், ஆற்றில் புதைந்திருந்த பாண்டிய மன்னர்கள் காலத்து கட்டடம் தென்பட்டுள்ளது. கொற்கை பகுதி துறைமுகமாக இருந்ததால் ஆத்தூர், உமரிக்காடு, வாழவல்லான் உள்ளிட்ட பகுதிகளில் பாண்டிய மன்னர்கள் வாழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது வெளியே தெரிந்துள்ள கட்டடம் அரண்மனையின் மேற்கூரை அல்லது நீராழி மண்டபமாக இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
தாமிரபரணி ஆற்று நாகரிகத்தை அறிந்து கொள்ளும் வகையில், உமரிக்காடு பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

credit ns7.tv