credit ns7.tv
பேனர் விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஹெச்.ராஜா பங்கேற்ற கூட்டத்திற்காக, அனுமதியின்றி வழிநெடுகிலும் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ பேனர் விபத்தில், உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளின் விளைவாக, உரிய அனுமதி இன்றி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை, சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும், அரசியல் கட்சி தலைவர்களும், முன்னணி நடிகர்கள் பலரும், பேனர் வைக்கக்கூடாது என தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். கோட்டகம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தை முன்னிட்டு, வழிநெடுகிலும் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அனுமதியின்றி வைக்கப்பட்ட இந்த பேனர்களை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்காதது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.