சனி, 21 செப்டம்பர், 2019

வாட்சப் ஸ்டேட்டசை இனி ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம்- வாட்சப்பின் புதிய அப்டேட்

Image
வாட்சப் செயலியில், பயனாளர்களால் ஷேர் செய்யப்படும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கிலும் ஷேர் செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஸ்டோரியை பகிர்ந்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வசதியானது, பேஸ்புக்கின் மற்றொரு சமூகவலைதளமான வாட்சப்பிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. வாட்சப் பயனாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த வசதியானது, தினமும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வாட்சப்பில் ஸ்டோரி வசதியை பயன்படுத்தும் அளவிற்கு, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் யாரும் அதிகமாக பயன்படுத்தவில்லை.
இந்நிலையில், வாட்சப் ஸ்டோரியை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்தியிருக்கிறது வாட்சப். இந்த வசதியானது, ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ஆகிய இயங்குதளங்கள் இரண்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், வாட்சப்பில் பகிரும் ஸ்டோரியை, மேல் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடுவதன் மூலம், திறக்கும் திரையில், share to facebook என்ற ஆப்சனை தேர்வு செய்தால், மற்றொரு திரை தோன்றும். அதில் நீங்கள் யாருக்கு ஷேர் செய்ய வேண்டும் என்ற வசதியை பயன்படுத்தி, பொதுவிலோ அல்லது நண்பர்களுக்கு மட்டுமோ பகிர்ந்து கொள்ளலாம். வாட்ஸப் ஸ்டோரியை ஷேர் செய்ததும் அந்த ஸ்டோரியானது, பேஸ்புக் ஸ்டோரியில் பகிரப்பட்டுவிடும். அதை உங்கள் வாட்சப் நண்பர்கள் மட்டுமல்லாது, பேஸ்புக் நண்பர்களும் பார்த்துக்கொள்ளலாம்.
இது மட்டுமல்லாமல், வாட்சப்பில் மற்றொரு அப்டேட்டும் வெளிவர காத்திருக்கிறது. நீங்கள் பகிரும் ஸ்டோரியை யார் பார்க்கக்கூடாது, அல்லது யாராவது பகிரும் ஸ்டோரியை நீங்கள் பார்க்கக்கூடாது என்று மியூட் செய்த நபரின் ஸ்டோரி ஷேடோ செய்தவாறு கீழே தெரியும். மியூட் செய்திருந்தாலும், நாம் விருப்பப்பட்டால் அந்த ஸ்டோரியை பார்த்துக்கொள்ளும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறது வாட்சப் நிறுவனம். புதிதாக வரவிருக்கும் அந்த அப்டேட்டில், மியூட் செய்யப்பட்ட நபரின் ஸ்டோரியை முழுவதுமாக பார்க்க முடியாது. அவரது ஸ்டோரி முற்றிலுமாக தெரியாத வகையில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.
whatsapp-mute-update

இந்த வசதியானது தற்போது, பரிசோதனை முறையில் சில நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. மிக விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

credit ns7.tv