மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி கொள்கைக்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அலுவல் மொழிகள் அனைத்தும் சமமானவை தான் என தெரிவித்துள்ள அவர், கர்நாடகாவை பொறுத்த வரை கன்னட மொழிதான் முதன்மையான மொழி என குறிப்பிட்டுள்ளார்.
கன்னட மொழியின் முக்கியத்துவத்தையும், கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்வதில் எந்த விதத்திலும் கர்நாடக அரசு பின்வாங்காது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்திற்கு பாஜக முதலமைச்சர் ஒருவரே எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
credit ns7.tv