வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ, மாணவர்களால் சிறைபிடிப்பு..!


Image
கொல்கத்தா ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை, மாணவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஜடாவ்பூர் பல்கலைக்கழகத்தில் நேற்று ஏபிவிபி மாணவர் சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சென்ற மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பபுல் சுப்ரியோவை, இந்திய மாணவர் சங்கத்தினர் சிறைபிடித்தனர். கருப்புக் கொடியுடன் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் அமைச்சர் சுப்ரியோவால் உள்ளே செல்ல முடியவில்லை. மேலும் அவரை தாக்குவதை போல் மாணவர்கள் சிலர் அத்துமீறினர். இது குறித்து பேசிய அமைச்சர் பபுல் சுப்ரியோ, மாணவர்களின் இப்போராட்டம் வருந்தத்தக்கது என பபுல் சுப்ரியோ கூறினார். 
பின்னர் விழா முடிந்து புறப்பட்ட சுப்ரியோவின் காரை மீண்டும் மாணவர்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த ஆளுநர் ஜெகதீப் தாங்கர், போலீசார் உதவியுடன் சுப்ரியோவை தமது காரில் அழைத்து சென்றார். 
credit ns7.tv

Related Posts:

  • *** திருக்குர்ஆன் *** தமிழாக்கம் : பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள். அத்தியாயம் : 4 அன்னிஸா - பெண்கள் மொத்த வசனங்கள் : 176 … Read More
  • பெண்கள்- திருக்குர்ஆன் *** திருக்குர்ஆன் *** தமிழாக்கம் : பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள். அத்தியாயம் : 4 அன்னிஸா - பெண்கள் மொத்த வசனங்கள் :&n… Read More
  • 56 பெண்கள் இதுவரைக்கும் 56 பெண்கள் இதுவரைக்கும் whisper, stayfree, etc. உபயோகித்ததால் இறந்திருப்பதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உண்மையா ....என தெரியவில்லை....காரணம், அத… Read More
  • Poster Read More
  • மறைவான செய்திகளை அறிந்த முஹ்யித்தீன் ?. وعاش خضر سلاما  *بضعا وتسعين عاما مع ما حباه الغلاما  *حفاظ خير الكلام لسن سبع كميل *سبع شهور قليل கிள்று என்பார் தொண்ணுறு ஆண்டுகள… Read More