புதன், 11 செப்டம்பர், 2019

ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய iphone-களின் சிறப்பம்சங்கள்...!

credit ns7.tv
Image
தொழில்நுட்ப உலகில் புதுமையை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், 2019ம் ஆண்டுக்கான புதிய செல்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய செல்போன்களுக்கு ஐபோன் 11, ஐபோன் 11 புரோ, ஐபோன் 11 புரோ மேக்ஸ் என பெயரிட்டுள்ளது. ஐபோன் 11ல் இரண்டு கேமராக்களும், ஐபோன் 11 புரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டு புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது 
ஐபோன்களில் முதன்முறையாக செல்ஃபி கேமராவில் ஸ்லோ மோஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த போனிலும் இல்லாத வசதி என்பதால் இதற்கு ஸ்லோஃபி என பெயரிட்டுள்ளது. 
ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன் மாடலாக ஐபோன் 11 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வசதி வழங்கப்பட்டுள்ளது. 
ஐபோன் 11ல் 6.1 இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியும், மற்ற இரண்டு ரகங்களிலும் முறையே 5.8 இன்ச், 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. 
ஐபோன் 11 ப்ரோவில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இது தற்சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் Snapdragon 855 ப்ராஸசரை விடவும் அதிக திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஐபோன் 11 மாடல் 64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி ஆகிய மெமரி, ஐபோன் 11 ப்ரோ, மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவை 64 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய மெமரிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது