இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் வேலைக்கான தகுதியானவர்கள் தான் இல்லை என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் நாட்டில் வேலைவாய்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது என்றும் இந்தியாவில் வேலைக்கு இங்கு பஞ்சமில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், அந்த வேலைக்குத் தகுதியானவர்கள் தான் நம் நாட்டில் இல்லை என குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரும் பட்சத்தில், அவர்கள் வழங்கும் வேலைக்கு இங்கு தகுதியானவர்கள் இல்லை என கூறுவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பு நிலைமை குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv