இந்தியாவை சர்வாதிகார பாதைக்கு கொண்டு செல்வதாக மத்திய அரசு மீது வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அமித்ஷாவின் சமீப கால கருத்துகள் ஹிட்லரின் கருத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக விமர்சனம் செய்தார். எந்த கட்சியும் இல்லாமல் பா.ஜ.க மட்டும் இருக்க வேண்டும் என அமித் ஷா கருதுகிறாரா என்று கேள்வி எழுப்பிய வைகோ, இது சர்வாதிகார பாதையை நோக்கி செல்வதை காட்டுவதாக குற்றம்சாட்டினார்.
தமிழ் தான் சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி என்று பிரதமர் உண்மையிலேயே கருதினால், தமிழை முதலில் ஆட்சி மொழியாக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தினார்..
credit ns7.tv