உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள லக்ஷ்மிபத் பல்கலைக் கழக விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மன்மோகன் சிங், ஜனநாயகத்தை வலுப்படுத்த கொள்கையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் தேவை என குறிப்பிட்டார். இந்திய அரசியல் சாசனத்தின் உயர் மதிப்பீடுகளைப் பாதுகாக்கக் கூடியவையாக அரசியல் கட்சிகள் திகழ வேண்டும் என கேட்டுக்கொண்ட மன்மோகன் சிங், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் சட்டத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த அமைப்புகள் அவ்வாறு செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளதாகவும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
credit ns7.tv