தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மற்றும் 8ம் வகுப்புகளுக்கு , இனி பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் இந்த பொதுத்தேர்வு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு பொதுத்தேர்வில் இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி, மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு 2 தாள்களும் , ஒரே தாளாக மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு காலம் குறைக்கப்படுவதால், மாணவர்களின் மனஅழுத்தம் குறைவதுடன், விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கான நாட்களும் குறையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
credit ns7.tv