திங்கள், 9 செப்டம்பர், 2019

சந்திரயான்-2 திட்டத்தை பாராட்டிய பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை!

Image
பாகிஸ்தானின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை நமீரா சலீம் சந்திரயான்-2 திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து வெளியாகும் டிஜிட்டல் அறிவியல் இதழ் ஒன்றிக்கு, பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான நமீரா சலீம் அளித்துள்ள பேட்டியில், “விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் மெதுவாக இறங்கச் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சிக்காக இந்தியா மற்றும் இஸ்ரோவிற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சந்திரயான்-2 திட்டம் தெற்காசியாவின் மாபெரும் பாய்ச்சலாகும், இது இந்த பிராந்தியம் மட்டுமல்லாது சர்வதேச விண்வெளித்துறைக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
விண்வெளித்துறையில் பிராந்தியத்தின் வளர்சிக என்பது குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. எந்த நாடு இதில் முன்னிலை வகிக்கிறது என்பது விஷயமல்ல. விண்வெளியில் அரசியல் எல்லைகள் கரைந்துவிடுகின்றன, அங்கு எது நமக்கு ஒரு பொருட்டல்லவோ அது பூமியில் நம்மை பிரித்தாளுகிறது”
Virgin Galactic வாயிலாக விண்வெளிக்கு சென்ற முதல் பாகிஸ்தானிய வீராங்கனை என்ற பெருமையை நமீரா சலீம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

credit ns7.tv