செவ்வாய், 10 செப்டம்பர், 2019

கேரளாவில் புதிய மோட்டர் வாகன சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!

Image
பல மடங்கு அபராதம் விதிக்கும் மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை செயல்படுத்துவதை கேரள அரசு நிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது. 
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின் மூலம், சாலை விதிகளை மீறுவோருக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவை நிறுத்திவைத்துள்ளன. 
கேரளாவில் அமல்படுத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்தது. பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல்கள் முற்றி வரும் நிலையில், இச்சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கேரள அரசு தீர்மானித்துள்ளது. 

credit ns7.tv