வியாழன், 19 செப்டம்பர், 2019

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து இன்று லாரிகள் வேலை நிறுத்தம்..!

Image
புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து இன்று நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்றும் வகையில், மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் போக்குவரத்து விதிகள் மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் இன்று லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மாலை 6 மணி வரை லாரிகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் சரக்குகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

credit ns7.tv