ஒடிசாவில் போக்குவரத்து விதிமீறியதாக லாரி உரிமையாளருக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன சட்டத்தில் அபராதங்கள் அதிகரிக்கப்பட்டதற்கு, பல மாநிலங்களிலும் எதிர்ப்பு வலுத்த வந்த நிலையில், அபராத தொகை குறைப்பது குறித்து அந்தந்த மாநிலமே முடிவெடுத்து கொள்ளலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்தார்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே வந்த நாகலாந்தை சேர்ந்த லாரி ஒன்றை மறித்து சோதனை நடத்தினர். போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், காற்று மற்றும் ஒலி மாசுபாடு, சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றுதல், உரிமம் இல்லாமல் லாரியை இயக்குதல், இன்சூரன்ஸ் இல்லாதது போன்ற போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, போக்குவரத்து விதி மீறியதாக மொத்தம் 6 லட்சத்து 53 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகைக்கான ரசீதை லாரியின் உரிமையாளரிடம் போக்குவரத்து போலீசார் வழங்கினர். புதிய வாகன சட்டத்தின் படி, நாட்டில் இதுவரை போக்குவரத்தை மீறியதாக வழங்கப்பட்ட அதிகபட்ச அபராதத்தொகை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv