பொறியியல், மருத்துவப் படிப்புகளைப் போன்று கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கும் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பதைப் போன்று கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்காக ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலாளர் கே. சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இதில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர அடிப்படையில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்த இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2020 - 2021 கல்வியாண்டு முதல் கலை அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv