ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் புதிய கதவணைகள்...

Image
காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் புதிய கதவணைகள் அமைய இருப்பதாக, தமிழக பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.
காவிரி ஆற்றில் வரக்கூடிய உபரி நீரை சேமிப்பதற்காக, தமிழக முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, தலைமையிலான அதிகாரிகள், கரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.  
காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர், 387 கோடியே .60 லட்ச ரூபாய் செலவில், முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் புதிய கதவணை பணிகளையும் பார்வையிட்டனர். 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, முதன்மை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி,  கரூர், திருச்சி, முசிறி, ஆகிய இடங்களில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டதாகவும்,  தொடர்ந்து அரியலூர், தஞ்சை மாவட்டங்களில், ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். 

credit ns7.tv