வெள்ளி, 13 செப்டம்பர், 2019

இஸ்ரோ ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீ ஹரிகோட்டாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ..!

Image
தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
இந்தியாவில் கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவ இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்க விடுத்தது. இதனை அடுத்து கடல் பகுதியை ஒட்டிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீஹரிக்கோட்டா செல்லும் வழி மற்றும் கடற்கரை கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா அருகேயுள்ள கடற்கரை பகுதிகளில் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

credit ns7.tv

Related Posts: