சனி, 21 செப்டம்பர், 2019

மதுராந்தகம் அருகே, டீக்கடை நடத்த லஞ்சம் கேட்டு மிரட்டிய காவல் ஆய்வாளர்...!

Image
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே, டீக்கடையில் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக வெளியான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாக்கம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பஞ்சாயத்து அனுமதியுடன் மஞ்சுளா என்பவர் டீ கடை வைத்து நடத்தி வந்துள்ளார். கடையை காலி செய்யக் கூறிய காவல் ஆய்வாளர் ஏழுமலை, தொடர்ந்து கடை நடத்த வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும் தர மறுத்தால் கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே காவல் ஆய்வாளர் ஏழுமலை மஞ்சுளாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொள்ளும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

credit ns7tv

Related Posts: