IIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் 3.8 லட்சம் கோடிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை பிடித்திருக்கிறார் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி. இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் யார், அவர்கள் நிறுவனம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தற்போது பார்க்கலாம்.
1.முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்துவரும் முகேஷ் அம்பானி 3.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த இடத்தை தொடந்து 8 ஆண்டுகளாக தக்கவைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2.எஸ்.பி.இந்துஜா & Family

இந்துஜா குழுமத்தின் சேர்மனாக இருந்து வரும் எஸ்.பி.சிந்துஜா 1.86 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த குழுமம் லண்டனை தலைமியிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடதக்கது.
3.அசிம் ப்ரேம்ஜி

மென்பொருள் நிறுவனம், மின்சாதன பொருள்கள் விற்பனை உள்ளிட்டவற்றில் பிரபலமான விப்ரோ நிறுவனத்தின் சேர்மனாக இருக்கும் அசிம் பிரேம்ஜி 1.17 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
4.லட்சுமி மிட்டல் & Family

இரும்பு உள்ளிட்ட உலோக தொழிற்சாலைகளை நடத்திவரும் ஏர்செலோர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மனாக இருந்து வரும் லட்சுமி மிட்டல், 1.07 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.
5.கவுதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவரும், குஜராத்தை சேர்ந்தவருமான கவுதம் அதானி 94,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
6.உதய் கோடக்

கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான உதய் கோடக் 94,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
7.சைரஸ் பூனவல்லா

74 வயதான சைரஸ் பூனவல்லா, பூனவல்லா குழுமத்தின் சேர்மனாக இருக்கிறார். 88,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ள இவர், இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் வாங்கியிருக்கிறார்.
8.சைரஸ் மிஸ்ட்ரி

அயர்லாந்து வாழ் இந்தியரான சைரஸ் மிஸ்ட்ரி டாடா குழுமத்தின் சேர்மனாக இருந்தவர். தற்போது ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் மேலான் இயக்குநராக இருந்துவரும் இவர், 76,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் வரிசையில் 8 வது இடத்தை பிடித்திருக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி இந்தியாவில் மட்டுமல்லாது பிரிட்டனிலும் ஒரு முக்கிய தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார்.
9.ஷபூர் பல்லோன்ஜி மிஸ்ட்ரி

ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் சேர்மனான ஷபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்ட்ரி, 76,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருக்கிறார். பார்ஸி இனத்தவரான ஷபூர்ஜியின் குடும்பம் பெர்சியாவிலிருந்து குஜராத்திற்கு இடம் பெயர்ந்தது. ஐரிஷ் பெண்மணி ஒருவரை மணந்து கடந்த 2003ம் ஆண்டு முதல் ஐரிஷ் குடிமகனாக இருந்து வருகிறார் ஷபூர்ஜி.
10.திலிப் சங்வி

credit ns7.tv