சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கனமழை காரணமாக பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் முக்கியமான பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் விரைந்து சாலைகளில் உள்ள நீரை அகற்றுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
news7tamilonline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் பகுதிகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகள் மற்றும் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளின் புகைப்படங்களை எந்த பகுதி என்பதை குறிப்பிட்டு முழு விவரங்களுடன் எங்களுக்கு அனுப்புங்கள். மாநகராட்சியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்.
credit ns7.tv