உத்தரபிரதேசத்தில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து சிதறியதில், 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரேபரேலியில் உள்ள தேசிய அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலன் நேற்று திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. உடனடியாக மின் நிலையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதில், 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், இதுவரை 10 உடல்களை மீட்டுள்ளனர்.
இதனிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.