புதன், 12 செப்டம்பர், 2018

சிறுநீரக கோளாறு உள்ளவர்களின் ஆயுட்காலத்தை நீடிக்குமா Coffee? September 12, 2018

Image

சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு Coffee-இல் இருக்கும் Caffeine உதவிகரமாக இருக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றது.

அண்மையில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க Caffeine பெரிய அளவில் உதவிகரமாக இருக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். ரத்த நாளங்களை அதிகம் செயல்படுத்தக்கூடிய Nitric Oxide-ஐ வெளியேற்றுவதால், Caffeien உடலுக்கு நல்லது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வயது, பாலினம் போன்றவற்றையும் தாண்டி, Caffeine எடுத்துக்கொள்வது சிறுநீரக கோளாறு உள்ளவர்களின் ஆயுட்காலங்களை நீட்டிக்கிறது. இதனால் தான் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அதிக அளவில் Coffee பருகவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மிகவும் எளிதான முறையிலும் குறைவான பண செலவிலும் அதிக நாட்கள் உயிர்வாழ வேண்டும் என எண்ணும் சிறுநீரக சம்பந்தமான நோயாளிகள் இந்த முறையை மேற்கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.