கேரள வெள்ளத்தில் தத்தளித்தவர்களுக்கு உதவி செய்த மீனவர் ஒருவருக்கு Marazzo கார் பரிசாக கிடைத்துள்ளது.
கேரளாவில் உள்ள தனூர் பகுதியை சேர்ந்தவர் ஜைசல் என்ற மீனவர். 32 வயதான இவர், கேரள வெள்ளத்தின்போது, மழை வெள்ளத்தால் தத்தளித்த தனது ஊர் மக்களை காப்பாற்றுவதற்காக தேசிய நிவாரணப்படையில் சேர்ந்து மக்களுக்கு உதவி வந்தார். அப்பொழுது, பெண்களை படகில் ஏறுவதற்காக இவர் குனிந்துகொண்டு அப்பெண்களை இவர்மீது ஏற அனுமதித்து காப்பாற்றினார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதனை அடுத்து, ஜைசல்-க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது.
வெள்ள பாதிப்பில் இருந்து தற்பொழுது கேரளா மீண்டுவந்துகொண்டிருக்கும் நிலையில், ஜைசலை பாராட்டுவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் கோழிகோட்டில் உள்ள மஹிந்திரா நிறுவன டீலரான இராம் (Eram) நிறுவனம், சுமார் 9 லட்சம் மதிப்புள்ள Marazzo கார் ஒன்றை பரிசாக வழங்கியது.