குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவை செங்குன்றத்திலுள்ள குட்கா குடோனிற்கு அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை சேகரிக்க மாதவராவை அழைத்துச் சென்று விசாரணை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குட்கா வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 5ம் தேதி அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல் துறை ஆணையர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 18 பேர்களின் வீடு மற்றும் அவர்கள் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் முடிவில், குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் வரித்துறை அதிகாரி என்.கே.பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ மேலும் சில ஆவணங்களை சேகரிக்க தீவிரம் காட்டி வருகிறது.