நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பாஜக தவறான புள்ளி விவரங்களை கூறி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், 1991-ஐம் ஆண்டு நாட்டில் தாராள மயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் 2006-07 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதமாக இருந்தது என தெரிவித்துள்ளார். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பாஜகவினர் அளிக்கும் தகவல்கள் முரணாக உள்ளது என குறிப்பிட்டுள்ள சிதம்பரம், அவர்கள் எந்த அடிப்படையில் வளர்ச்சி என்று கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.
உண்மையில் மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கைகளை பாஜகவினர் ஏற்கிறார்களா? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.