சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச்சாலை திட்டத்தின்கீழ் ஆறு வழிச்சாலைகள் மட்டுமே போடப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செய்துள்ளது. அதன்படி,
பசுமைவழிச்சாலை திட்டம் குறித்து கள ஆய்வு அடிப்படையிலான அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சமர்பித்துள்ளது. அதில், சென்னை - சேலம் இடையே தற்போது 6 வழிச்சாலையே அமைக்கப்பட உள்ளதாகவும், தேவை ஏற்படும்போது அது 8 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
வனப்பகுதி வழியே 13 கிலோ மீட்டருக்குப் பதில் 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், 300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாலைகளின் அகலம் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பசுமைவழிச்சாலை திட்டம் தொடர்பாக இதற்கு முன்னர் தயார் செய்யப்பட்ட தோராய அறிக்கையில், திட்டத்தை செயல்படுத்த 10 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.