வெள்ளி, 8 மார்ச், 2019

இன்னும் ஓரிரு நாட்களில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு! March 08, 2019

Image
மக்களவை தேர்தல் நடத்தப்படும் தேதியை, தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
16வது மக்களவைக்கான பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி முடிவடைய உள்ளது. புதிய மக்களவையை தேர்வு செய்வதற்காக, தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பாகவே, 15 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது, தேர்தல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.