துருக்கி நாட்டில் உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது.
இஸ்தான்புல் நகரில் உள்ள அனாடர்க் விமான நிலையத்திற்கு பதிலாக, அங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உலகின் மிகப்பெரிய பிரம்மாண்ட விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு அனாடர்க் நகரில் இருந்து 47 ஆயிரத்து 300 டன் எடையுடைய பொருட்கள் 688 லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன. ஆண்டுடொன்றுக்கு 9 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆண்டுதோறும் 20 கோடி பயணிகள் வந்து செல்வார்கள் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
source ns7.tv