வியாழன், 10 அக்டோபர், 2019

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி: காலிறுதிக்கு 5 இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!

உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்றுக்கு மேரி கோம் உட்பட 5 இந்திய வீராங்கனைகள் முன்னேறியுள்ளனர்.
ரஷ்யாவின் Ulan-Ude நகரில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்களில் இந்திய வீராங்கனைகள் ஜமுனா போரோ மற்றும் லோவ்லினா போர்கொஹைன் ஆகியோர் இன்று களமிறங்கினர்.
54kg எடை பிரிவில் அல்ஜீரியாவை சேர்ந்த Ouidad Sfouh-ஐ எதிர்த்து ஜமுனா போரோ விளையாடினார். 22 வயதே ஆன ஜமுனாவிற்கு இது முதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியாகும். அதே நேரத்தில் அல்ஜீரிய வீராங்கனை ஆப்பிரிக்க சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இருப்பினும் அபாரமான செயல்பட்ட ஜமுனா 5-0 என்ற கணக்கில் Sfouh-ஐ வீழ்த்தி காலிறுதியை எட்டினார். இவர் காலிறுதியில் பெலாரஸை சேர்ந்த Yuliya Apanasovichஐ எதிர்கொள்ளவுள்ளார்.
அசாமை சேர்ந்தவரான ஜமுனா 2015ன் உலக இளையோர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இவரின் தாயார் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு தனது மகளின் விளையாட்டுக்கான உதவிகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல 69கி எடைபிரிவில் மொராக்கோவின் Oumayma Bel Ahbibஐ எதிர்த்து இந்தியாவின் அனுபவம் வாய்ந்த லோவ்லினா போர்கொஹைன் களமிறங்கினார். அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற புள்ளிக்கணக்கில் லோவ்லினா வெற்றி பெற்று காலிறுதியை அடைந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5 வீராங்கனைகள் காலிறுதி சுற்றை அடைந்துள்ளனர்.
முன்னதாக 6 முறை உலக சாம்பியனான மேரி கோம் 51கி எடை பிரிவிலும், மஞ்சு ராணி 48கி பிரிவிலும், கவிதா சாஹல் 81+ எடை பிரிவிலும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் 5 இந்தியர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.    
credit ns7.tv