வியாழன், 10 அக்டோபர், 2019

மகாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தல்களில் காங். வெற்றி பெறாது: சல்மான் குர்ஷித்

Image
மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித்,  நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார். 
பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் ராகுல் காந்தி, தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள சல்மான் குர்ஷித், அவரது இந்த நடவடிக்கையால் கட்சிக்குள் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 
ராகுல் காந்தியின் முடிவை தாங்கள் மதிப்பதாகவும், அதே நேரத்தில், நெருக்கடியான சூழலில் கட்சி இருப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருப்பதாகவும் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, எதிர்வரும் மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 
credit ns7.tv