சிவகங்கை மாவட்டம் கீழடியில் பழங்கால மனிதர்கள் தங்குமிடமாக பயன்படுத்தும் கல்திட்டை கண்டறியப்பட்டுள்ளது.
பாறைகளின் மறைவில் மழை, வெயில் போன்றவற்றிற்காக கல்திட்டை அமைத்து அதில் பண்டைய கால மனிதர்கள் வசிப்பிடமாக பயன்படுத்தியிருக்க கூடும் என கருதப்படுகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் கல்திட்டைகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கீழடியில் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டறியப்பட்டது. கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நான்கு மாதங்கள் நடந்த பின் முடிவடைந்துள்ளது.
52 குழிகள் தோண்டப்பட்டு நடந்த அகழாய்வில் 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கட்டட தொழில்நுட்பம், வேளாண்மை, நெசவு உள்ளிட்டவற்றில் தமிழர்கள் மேம்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே, கீழடியில், தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
credit ns7.tv