பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய..
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (LKG & UKG), துவக்கப் பள்ளிகளுக்கும் (1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வித்துறை அறிக்கை… அமைச்சர் பேட்டி… முதல்வர் விளக்கம்… பள்ளிகள் விடுமுறையில் உண்மை என்ன?
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மாணவர்களுக்கு வரும் மார்ச் 31ம் தேதி விடுமுறை என பள்ளிக் கல்வி ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும்,கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய கேரளா எல்லையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அந்த சுற்றரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இது சாா்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசுடன் விவாதிக்க வேண்டியுள்ளதால் இந்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. எனவே, மார்ச் 16ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படுமா? செயல்படாதா ? என்ற குழப்பத்தில் பெற்றோர்கள் இருந்தனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” பள்ளி விடுமுறை குறித்து முதலமைச்சருக்கு பல கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே பள்ளி விடுமுறை தொடர்பாக ஒரு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது, விரிவான தகவலை முதல்வர் விரைவில் வெளியிடுவார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு திரும்பும்போது செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, “விடுமுறை அறிவிப்பு உண்மை தான். அதில் எந்த குழப்புமும் இல்லை. இருப்பினும், இதுகுறித்த முழுமையான அறிவிப்பு இன்று (மார்ச் -15) வெளியாகும் என்று தெரிவித்தார்.
எனவே, இன்று வெளியாகும் அறிவிபிர்காக பெற்றோர்களும், குழந்தைகளும் காத்துக் கொண்டிருகின்றனர். விடுமுறை மற்ற வகுப்புகளுக்கும் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விக்கும் இன்று பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
credit ns7.tv