வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நவம்பர் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால், இரட்டை பதிவுகள், வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த கூட்டத்தில் ஆலோசிக்கவுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது உள்ளது. கொரோனா தொற்று பரவல் இருப்பதால், பின்னர் இந்த கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், ஹெச்.வசந்தகுமார் காலமானதால், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக இருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார் மேலும் அது குறித்து அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.