தேசிய கல்விக் கொள்கைக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.
திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் வாசித்தார். மறைந்த திமுக நிர்வாகிகள் 140 பேருக்கு இரங்கல் தெரிவிப்பது.
➤ அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிப்பது
➤ மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு கண்டனம்
➤ இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் சமூக அநீதி களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
➤ இந்தி மொழியை திணிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கூடாது
➤ சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தி.மு.க. தலைவர் முதல்வராக 2021ல் ஆட்சி அமைத்திட சூளுரை ஏற்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் திமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.