சனி, 12 செப்டம்பர், 2020

நீட் தேர்வு அச்சம்: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை!

 நீட் தேர்வு அச்சத்தால் மதுரையைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்தது கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் முருக சுந்தரம் என்பவர் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் ஆயுதபடை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த சூழலில், இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்ற போதும் மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. 

ஆனால் மருத்துவ கனவை கைவிடாத மாணவி தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்தாண்டு நடைபெறும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று நிச்சயம் மருத்துவ படிப்பில் சேர்ந்து விடலாம் என்று தேர்வுக்கு உழைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்வு நெருங்குவதால் கடந்த ஒரு வாரமாகவே மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 

Image

நாளை தேர்வு நடைபெற உள்ளதால், இன்று அதிகாலை 1 மணி வரை தேர்வுக்கு படித்துள்ளர். அந்த நேரத்தில் தேர்வில் தோற்று பெற்றோருக்கு அவமானத்தை ஏற்படுத்தி விடுவோமோ என்ற அச்சத்தில் உருக்கக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே சமயம் ஆடியோ பதிவு ஒன்றையும் மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா வெளியிட்டுள்ளார். அதில் இது யாருடைய தவறும் இல்லை, யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம் என்றும், தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன் என பயமாக இருப்பாதாக மாணவி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நீட் தேர்வு அச்சத்தால் அரியலூத் மாணவர்விக்னேஷின் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் நீட் தேர்வுக்கு உயிரிழந்துள்ளது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.